நிற்பது த்யான நிலையில்
நடப்பது த்யான நிலையில்
உண்பதும் உறங்குவதும் த்யான நிலையில்
குருவே எல்லாம் நின் கருணை
————————-
நான் த்யான நிலையில் நிற்கும் பொழுது
– மனதின் ஏற்ற இறக்கங்கள் தெரிந்தது
– மூச்சின் உள் வாங்கி விடும் மர்மங்கள் புரிந்தது
– நல்லது கெட்டதிலிரிந்து விலகி நின்றேன்
அனைத்தும் குருவே நின் கருணை
————————
குருவே தாங்களே எனது
– விதியாகி நிற்கின்றீர்கள்
– கதியாகி நிற்கின்றீர்கள்
– உணர்வாகின்றீர்கள்
எனது உயிரே தாங்கள் தான்
———————–
எதை தேடுகின்றேன்
– த்யான அனுபவங்களையா
– த்யான நிலைகளையா
– உணர்வையா
– உயிரையா
தேடும் அனைத்தும் வீண் என அறிந்து கொண்டேன்
குருவே தாங்கள் தான் எல்லாம் என அறிய இவ்வளவு முயற்சி தேவையா ?
———————–