• குருவையும் (இறைவனையும்) நம்புவதற்கு இப்படி ஒரு சூழ்நிலை இருந்தால் நம்பி இருப்பேன், அப்படி சூழ்நிலை இருந்தால் நம்பி இருப்பேன் என்று எந்த ஒரு காரணமும் தேவையில்லை.. இவை எல்லாம் “அகந்தையால்” எழும் காரணங்கள். எந்த தருணத்திலும், எந்த நிலையிலும் நமது வாழ்வை குருவிடம் ஒப்படைக்கலாம். அவ்வாறு “அகந்தை” எழுப்பும் கேள்விகள், கவலைகளை பொருட்படுத்தாமல் ஒப்படைக்கும் போது அகந்தையின் இயல்பு புரியத்தொடங்கும்..
  • துன்பப்படும் காலங்களே குருவையும், இறைவனையும் முழுமையாக நம்புவதற்கான மிகவும் கருணையான வாய்ப்பாகும். துன்ப காலங்களில் குருவையும், இறைவனையும் நம்பி அகந்தையால் எழும் பயத்தையும், கேள்விகளையும் கடந்து அவை அனைத்தையும் ஒப்படைக்கும் பொழுது குரு மற்றும் இறைவன் கருணை தெரியவரும்.. துன்பங்களை இறைவன் அமைப்பதே இந்த சரண் அடைதலுக்குதான்.. ஒருவர் துன்ப காலங்களில் அகந்தையை (துன்பங்களை) ஒப்படைத்து குருவின் (இறைவனின்) கருணையையும், திருவிளையாடல்களையும் உணர முடியவில்லை என்றால் பின்பு எந்த சூழ்நிலையிலும், எப்போதும் உணர முடியாது… அகந்தை மேன்மேலும் ஒவ்வொரு விதமாக வளர்ந்து கொண்டு தான் போகுமே தவிர கருணையை உணர முடியாது.. நான் இதை குருவின் கருணையால் நன்றாக உணர்ந்து கொண்டு இருக்கிறேன்..🙏🙏🌺🌺
Translate »