என்ன சொல்வது குருஜியின் கருணையை பற்றி
என்ன சொல்வது மூன்று வருடங்களில் குருஜியுடன் அனுபவித்த அனுபவங்களை பற்றி
என்ன சொல்வது மாயையின் இருளிலும் குருஜியின் ஒளிவிடும் ரூபத்தை பற்றி
என்ன சொல்வது மாயையில் மிதிக்கப் பட்டினும் குருஜியின் தனி பெரும் கருணையை பற்றி
என்ன சொல்வது தவறின் இலக்கணமாக இருப்பினும் குருஜியின் மன்னித்தருளும் கருணையை பற்றி
என்ன சொல்வது தியானத்தில் பழுக்காத பச்சை மரமாக இருப்பினும் பாவிக்கு ஆத்ம ஞானம் போதிப்பதற்கு
என்ன சொல்வது குருஜி எனக்காக இத்தனை சமயத்தை கொடுப்பதற்கு
எத்தனை எத்தனை முறை
நித்தம் நித்தம் எவ்வளவு முறை
எத்தனை மணி நேரம்
எவ்வளவு கருணை
குருஜி அவர் நிலை தாழ்ந்து
எனக்காக கருணை பாவித்து
நேரம் கழித்து
அருளையும் பொழிந்து
பொருளையும் பொழிந்து
உணர்வையும் பொழிந்து
உயிரையும் பொழிந்து

வாழ்க்கை துணையையும் அருளி

மருளையும் விலக்கி
மாயையின் இருளையும் விலக்கி
என்ன சொல்வது என்ன சொல்வது
எவ்வாறு இயம்புவேன்
எவ்வாறு நன்றி மொழிவேன்
என்ன சொல்வது என்ன சொல்வது

Translate »