பார்வையில் பக்தி வேண்டும்
வார்த்தையில் பக்தி வேண்டும்
மனதினில் பக்தி வேண்டும்
குருவே நான் பக்தி தன்னில் கரயவேண்டும்

—————–

கடவுளே நன்றி – எனக்கு தவழ , நீஞ்ச, நடக்க, பேச கற்றுக் கொடுத்ததாய்
குருவே நானே கடவுள் என அறியவைதீர் அதற்கு எவ்வாறு நன்றி கூறுவேன்

——————

உடம்பல்ல நான்
மூச்சல்ல நான்
மானதல்ல நான்
உயிரே நான் என அறிய இவ்வளவு முயற்சி ஏன்?

——————–

குருவே நாடகங்கள் கலைந்திடடும்
நான் நானாகி நிற்க அருள் புரிவீராக.
———————
குருவே,
உணர்வில் நிற்க
உயிரில் நிலைக்க
உண்மையாகவே இருக்க
அருள் புரிவீராக

———————-
குருவே,
எனக்கு நன்மைகள் பெருகட்டும்
எனக்கு தீமைகள் விலகட்டும்
எனக்கு மனம் அது விலகி நிற்கட்டும்
உண்மையில் லயிக்க அருள் புரிவீராக

———————-

முத்து குளிக்க மூச்சு பயிற்சி தேவை
மனம் அடங்க த்யான பயிற்சி தேவை
தன்னை அறிய குரு சேவை மட்டும் போதுமே

————————-

உடையை வைத்து குருவை தெரிந்து கொள்ள முடியாது
நடையை வைத்து குருவை தெரிந்து கொள்ள முடியாது
மனதை வைத்து குருவை தெரிந்து கொள்ள முடியாது
குருவை தெரிந்து கொள்ள முடியவே முடியாதோ ?

————————-

Translate »