சில சமயத்திற்க்கு முன்பு,

நான் பேசிக்கொண்டிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும் பொழுது பேச்சு நின்றது. இடையில் திடீரென்று மனம் சலனமற்று போனது. ஒரு பயம் எழுந்தது. ஒரு சிறுபிள்ளையை இருட்டறையில் விட்டு போன பயம் இருந்தது. உடல் ஒரு காலி அரை போல் இருந்தது. உள்ளே யாரும் இல்லை, நானும் இல்லாமல் போவதை போல இருந்தது. இந்நிலையில் மாண்டு விடுவேன் என்ற பயம் மட்டுமே இருந்தது.

இன்று,

ஆத்ம விழிப்புணர்வு சபையில் தியானம் புரியும் பொழுது மனம் அடங்கி அற்று போனது. நான் என்ற உணர்வு மட்டும் ஒரு தேன் கூடு போல கூடி நின்றது. எண்ணமற்று சற்று அதிக நேரம் இருக்கவே மற்றும் அனைத்தும் காலியாக இருக்கவே மெலிதாக பயம் நெருடியது.

Translate »