நான் எனது என்ற எண்ணம்
உதிரும் பொழுது ஆத்மானுபவம் கிட்டும்
—————————————-
கண்கள் பார்க்கும் ஆனால் பார்க்காது
காதுகள் கேட்கும் ஆனால் கேட்காது
உடல் அசையும் ஆனால் அசையாது
இதை அனுபவிப்பவன் அத்மனுபவத்திற்கு அருகில் உள்ளானே
————————————–
பார்ப்பவன் நானே
கேட்பவன் நானே
நிற்பதும் நடப்பதும் நானே
மனமின்றி இருப்பதும் நானே
உணர்வாகின்ற பொழுது பிறகு
உத்தமனாகி நிற்கின்றேனே
——————————————
நிற்பதும் நடப்பதும் மாயையே
வருவதும் போவதும் மாயையே
இருப்பதும் கடப்பதும் மாயையே
மாயை இல்லாதது ஒன்றுதான்
அது அத்மனுபவத்தில் லயிபவனுக்கே புரியும்
——————————————-
கண்கள் பார்க்கும் சக்தி
காதுகள் கேட்கும் சக்தி
நாக்கு நவிலும் சக்தி
அனைத்து சக்திகளும் ஆத்மாவே
——————————————-
இது உணர்வே
அது உணர்வே
அவை உணர்வே
இவை உணர்வே
இங்கும் உணர்வே
அங்கும் உணர்வே
உணர்வே எல்லாம்
———————————————
உடல் நானல்ல
பேச்சு முச்சு நானல்ல
மனம் நானல்ல
உணர்வே நான்
உயிரே நான்
———————————————-
அகமும் நானே
புறமும் நானே
அனைத்தும் நானே
அன்னைதுள்ளும் நானே
நானே எல்லாமுமாய் நிற்கின்றேனே
———————————————
நின்றாலும் நானே
நடந்தாலும் நானே
கிடந்தாலும் நானே
என்னைத்தவிர வேறொன்றும் இல்லையே
———————————————-
விழிப்பிலும் நானே
கனவிலும் நானே
உறக்கத்திலும் நானே
கட்சியும் கண்டவனும் நனைகி நிற்கின்றேனே
———————————————-
பிறப்பில்லாதவன் நான்
இறப்பில்லாதவன் நான்
அழிவில்லாதவன் நான்
தோற்றம் இல்லாதவன் நான்
நானே நனைகி நிற்கின்றேனே
————————————————–
தொற்றவைப்பவன் நானே
காப்பவன் நானே
அழிப்பவன் நானே
நானே முன்று உலகிலும் பிரகசிகின்றேனே
————————————————–
மெய்பொருள் அதுவே
உண்மை அதுவே
சத்தியம் அதுவே
ஆத்மா அதுவே
அதை தவிர வேறொன்றும் இல்லையே
————————————————–

Translate »