ஓம் ஸ்ரீ குருவே போற்றி🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமஹ🙏🏻🙏🏻🙏🏻

குருவே! அடியேனது மனத்தில் விளங்குகின்ற ஒளியே! உண்மையான நிலையை அறியாத பெருமையில்லா எனக்கு, மேன்மையான பதத்தைக் கொடுத்ததாகிய ஒப்பற்ற அன்பானவனே! சொல்வதற்கு அருமையான வளமையான சுடர் வடிவினனே! அருட் செல்வமே! குருவே! ஈசனே!

என் சித்தத்துள் புகுந்து தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காட்டிய மெய்ப்பொருளே! ஒளியையுடைய விளக்கே! விளக்கினுள் தோன்றும் வளமையான சுடர் போலும் வடிவினனே! அருட்செல்வமே! குருவே! இறைவனே!

நான் உன் திருவடிகளை தேடி, தாயை கண்ட கன்று போல அன்பில் உருக வேண்டும்! பக்தனைப் போல! ஒரு கன்றை ஈன்ற பசுவின் மனம் போல உருக வேண்டும்! ஆதரவு அற்றவனாகிய என்னுடைய மனத்தையே கோயிலாகக் கொண்டு ஆட்கொண்டு எல்லையற்ற இன்பத்தை அளித்திட வேண்டும் பரம்பொருளே! அருட்செல்வமே! என் குருவே!

ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻

Translate »