நேற்று முன்றைய தினம் எங்கள் குடும்பத்தில் அனைவரும் காஞ்சி காமாட்சி அம்பாள் கோவிலுக்கு சென்றிருந்தோம். 16.6.2016. செல்லும் போதே நான் மிகவும் கவலையுடன் தான் சென்றேன் .இருப்பினும் மனம் ஏற்படுத்தும் பயத்தை நான் கண்டு கொள்ள வில்லை ஆதலால் அந்த மாயையில் நான் மாட்டிக்கொள்ளவும் இல்லை. பின்பு கோவிலுக்கு சென்றவுடன் நான் அவ்வாறு மாறுவேன் என்று நினைத்துப் பார்கவே இல்லை . கவலையுடன் சென்ற நான் மிகவும் மகிழ்சியாக அனைவருடனும் பேச ஆரம்பித்து விட்டேன் அத்தனை கடினமாக இருந்த என் மனம் எப்படி மாறியது என்று எனக்குள்ளே ஒரு கேள்வி வந்தது .அதை என்னால் நம்ப முடியவில்லை.பின்பு அம்பிகையான அன்னை காமாட்சி, ஆதிசங்கரர், துர்வாசமுனிவரை தரிசித்து விட்டு, துர்வாசர் சிலைக்கு முன்பு அமர்ந்து குருவை வேண்டிவிட்டு தியானத்தில் அமர்ந்தேன். தியானத்தில் அமர்ந்த சில வினாடிகளில் அனைத்தும் எனக்குள்ளே வெறுமையாகி விட்டது.  நான் கவலையுடன் வந்த நிலைமைக்கு அன்னை காமாட்சியின் அன்பை என்னால் நன்றாக உணர முடிந்தது என் தியானத்தில். தியானத்தை முடித்த பிறகு எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதியை அங்கு இருந்தவர்கள் அம்பாளின் முன்பாக அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள். தியானத்தை முடித்த அந்நிலையில் அந்த பாடல்களை கேட்க மிகவும் இனிமையாக இருந்தது.

Translate »