நேற்று முந்தைய தினம் (1.11.2015)  சத்சங் அன்று நானும் என் சகோதரனும் குருஜியின் இல்லத்திற்கு சென்றிருந்தோம்.  அங்கு ஒரு மணி நேரம் 30 நிமிடத்திற்கு மேல் தியானம் செய்தோம்.  சற்று நேரத்தில் குரு நாதர் வந்த பின்பு குரு நாதர் முன்பு அமர்ந்தோம் . குரு நாதர் முன்பு அமர்ந்த பின்பு நான் ஒரு பேரமைதி அடைந்தேன்.  அதை வார்தைகளால் என்னால் சொல்ல முடிய வில்லை. அந்த நேரம் நான் இப்படியே குரு நாதர் முன்பு அமர்ந்து விடலாமா என்று தான் நினைத்தேன். அந்த நேரம் எனக்கு கண்களை திற்ப்பதற்கே விருப்பம் இல்லை.  எனினும் விருப்பம் இன்றி கண்ளை திறந்தேன்.                                                         Om mahan sri guruji sundara morthy swamigale namaha

Translate »