இன்று நான் குருவின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் 24.6.2016. இன்று நான் குருவின் இல்லத்திற்கு சென்ற பிறகு அங்கு இருக்கும் குருவின் படம் மற்றும் மகான்களின் படங்களுக்கு பத்தி பொருத்தி காட்டினேன். மற்ற நாட்களை விட இன்று நான் மகான்கள் மற்றும் குருவின் படத்திற்கு பத்தி காட்டி வணங்கும் போது மிகவும் அன்புடனும் பக்தியுடனும் செய்தேன். எனக்குள் எந்ந சஞ்சலமும் இன்றி செய்தேன். அதை நன்றாக உணர முடிந்தது. பின்பு தியானதில் அமர்ந்தேன். தியானத்தில் அமர்ந்த சில வினாடிகளில் மீண்டும் அந்த இருளான அமைதியான உலகிற்குள் சென்றேன். எண்ணங்கள் நன்றாக அடங்கிய நிலை . இன்னும் ஆழ்ந்து செல்ல முடிந்தது. அது அவ்வாறே தொடர்ந்தது. நான் தியானம் செய்த நேரம் முழுமையாக வேறு உலகில் இருப்பது போல் இருந்தது. பின்பு குருவின் வீட்டிலிருந்து இறங்கும் போது அந்த இடம் மிகவும் அமைதியாகவும் தெய்வீகமாகவும் தெரிந்தது. பின்பு விட்டிற்கு வரும் வழியில் பார்க்கும் ஒவ்வொரு இடமும் மிகவும் அமைதியாகவும் தெய்வீகமாகவும் இருந்தது.
Experience in guruji ‘s home today 24.6 .2016
by Guruprasad Srinivasan | Jun 24, 2016 | Spiritual Experiences | 0 comments