அன்புள்ள குருஜி, சமீப காலங்களாக நான் எங்கும், எந்த இடத்தில் தியானம் செய்தாலும் “இருத்தல் உணர்வை” என்னால் நன்றாக உணர முடிகின்றது. மிக நன்றாக லயிக்க முடிகின்றது. மிகவும் ஆழமாக இருக்கின்றது. இதனால் தியானத்தில் நேரம் எப்படி செல்கின்றது என்றே தெரியவில்லை. அந்த உணர்வில் லயிக்கும் போது நேரம் செல்வதே தெரியவில்லை. எத்தனை சத்தங்கள் என்னை சுற்றி கேட்டாலும், அந்த உணர்வு அப்படியே இருக்கிறது. எதுவும் என்னை கலைக்கவில்லை. நான் அப்படியே இருக்கிறேன்.அதே போல் மனம் எப்படி எல்லாம் “இருத்தலை” விட்டு தேடலில் எப்போதும் இருக்கிறது என்பதை மிகவும் தெளிவாக உணர முடிகின்றது. அதே போல் நான் தியானம் செய்து தான் “இருத்தலை” உணர்கிறேன் என்று நிச்சயமாக சொல்லமாட்டேன். அந்த உணர்வே என்னை நன்றாக தியானிக்க வழிநடத்துகின்றது. அதுவே வழிநடத்துகின்றது. குருஜி இந்த உணர்வை எழுப்பியது கருணை மிக்க தாங்களே. இது தாங்கள் அளித்த பிட்சை. தங்களது கருணையின்றி இவை எல்லாம் நான் அனுபவிக்க மாட்டேன். தாங்களே என்னை நன்றாக வழிநடத்தவேண்டும் குருஜி. குருவே சரணம்🙏🙏🙏🙏

Translate »