அன்புள்ள குருஜி, நான் கடந்த இரண்டு வாரங்களாக தினமும் தியானத்தில் முக்கியமான ஒன்றை நன்றாக கவனித்து வருகிறேன்.. தியானிக்கும் போது உள்ளே எத்தனை எண்ணங்கள் ஓடினாலும் சமீப காலங்களாக நான் கண்களை திறப்பதே இல்லை. சில சமயம் கண்களை மூடி இருக்க என் மனம் ஒத்துழைக்காது.. இவ்வாறு முன்பு நடந்தால் நான் எழுந்து விடுவேன். அனால் இப்போதெல்லாம் இவை அனைத்தையும் தான்டி நான் கண்களை திறப்பதே இல்லை.. இவ்வாறு இருக்க எத்தனை என்னங்கள் உள்ளே ஓடினாலும், கண்களை மூடுவதற்கே கொடுமையாக இருந்தாலும், மனம் பாடாக படுத்தினாலும் இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அப்படியே விடும்பொழுது மிஞ்சுவது “இருத்தல்” மட்டுமே. “இருத்தல் உணர்வை” தவிற வேறொன்றும் இல்லை…அங்கு ஊன்றி நிற்கும் போது அடுத்த கனம் என்ற ஒன்றே இல்லை. அடுத்து என்ன?? என்ற கேள்விக்கே இடமில்லை… அதை தவிற வேறு ஒன்றுமே இல்லை.. குருஜி என்னுடைய தியானத்தின் இந்த மாற்றம் தங்கள் கருனையால் வந்ததே.. நான் இதற்காக எந்த முயற்ச்சியும் செய்யவில்லை.. நான் கண்களை முடுவதே தங்கள் கருணைதான். நன்றி குருஜி…🙏🙏🙏🙏

Translate »