நேற்று நான் குருஜீயின் இல்லத்திற்கு சென்றிருந்தேன் அங்கு ஓரு மணி நேரம் தியானம் செய்தேன். தியானம் செய்து முடித்த பின்பு சுதர்ஷன் சாரிடம் எனக்கு இருந்த பிரச்சணை பற்றி கூறினேன். அவர் என்னிடம் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று உபகரணம் கூறினார். பின்பு வேண்டி கொள்ள கூறினார். அவர் வேண்டி கொள்ள சொல்வதற்கு முன்பு எனது மன நிலை மிகவும் மோசமாக இருந்தது.மிகவும் வருத்தத்தோடடு இருந்தேன்.அங்கு இருந்த குருலிங்க சுவாமி படத்திற்கு முன்பு சென்று 5 நிமிடம் கண்களை மூடி வேண்டினேன் . அந்த நிலையில் நான் கொண்ட வருத்தத்திற்கு சுவாமி என் தலையில் கை வைத்து தட்டி கொடுப்பது போல் தான் உணர்ந்தேன் ஓரு தந்தையிடம் தனது மகன் ஒரு பிரச்சனையை கூறினால் அந்த தந்தை பிரியமளித்து தன் மகனை எவ்வாறு ஆதரிப்பாரோ அந்த ஆதரவை உணர்ந்தேன் .கண்களை மூடி வேண்டிய பின்பு துரியா சக்ராவில் 15 வினாடிகள் ஓரு கூச்சம் இருந்தது. அதை நான் என் தந்தை குருலிங்க சுவாமி எனக்களித்த ஆசிர்வாதமாகவே உணர்ந்தேன்.

Om mahan sri guruji sundara moorthy swamigal namaha.       Om mahan sri gurulinga swamygal namaha

Translate »