குருநாதரே வணக்கத்திற்கூறிய குருநாதரே
நான் உங்களிடம் இருந்து புரண்டாலும் விழிப்பற்று இருப்பது வீண் வீண் வீண்
நீங்கள் சொல்லும் திருவார்த்தைக்கு என் மனத்தை தடையாக கொண்டு வருவது வீண் வீண் வீண்
நீங்கள் பார்க்கும் அருட்பார்வையை நான் வாங்காமல் இருப்பது வீண் வீண் வீண்
நீங்கள் பொழியும் அருளாசியை நான் வாங்காமல் இருப்பது வீண் வீண் வீண்
குருவே நான் உங்கள் அருகில் இருந்தும், என்னுள் எந்த மனத்திரையும் கொண்டு வராமல்
உங்களின் முழு கருவியாகவும் முழு சீடராகவும் பக்தராகவும் சாதனையாளராகவும்
உங்கள் இஷ்டப்படி உங்கள் அருட்பார்வையில் வாழ ஆசை
==========================================================================================
நீங்கள் வந்து அமரும் இடமெல்லாம் தங்கமாக துலங்குகிறதே
நீங்கள் அமரும் இடம் ஒரு ஜீவன் மிகுந்த இடமாக மாறுகிறேதே
உங்கள் அருகாமையில் தவம் இயற்றும் பொழுது ஆழ்கடலில் இருப்பது போன்ற ஆழமான அமைதி
உங்கள் அருகாமையில் தவம் இயற்றும் பொழுது எனக்கு அருகில் இருப்பது தெரிகிறது
உங்களை சுவைக்கும் பொழுது என்னையே சுவைப்பது தெரிகிறது
அனுபவம் எனதா தங்களதா !!!
=========================================================================================
உங்கள் அருகில் தவமியற்றும் போது திரைலிங்கம் என்னும் மந்திரம் பிரவேசிப்பது எதனால் ?!?!
=========================================================================================