உமையவளே! 😍🙏

எது உண்மையோ?

அசையாமல் உள்ளிருந்து பார்த்திடும் உமையவள் உண்மையோ!

பார்த்திடும் என்னுள் அசையாமல் இருக்கும்
நான் உண்மையோ!

அசைவன எல்லாம் உயிருள்ளவை அன்று!
உயிருள்ளவை எல்லாம் அசைவனவும் அன்று!

தன்னுள் உயிரை கண்டபின்,
இவை அசைவன என்று, அசையாதன என்று பிரிவே
தோன்றுவதன்று!

யாதிலும் அவரேயன்றி
வேறன்று என உணர்ந்த பின், வெறும் உண்மையை தேடி நான் என்ன செய்வேன் – நின்னை சரணடைவதைத் தவிர! 🙏🏻🙇‍♀️🙇‍♀️🪷🪷✨

Translate »