சதா சர்வ காலம் சாட்சி சொருபமாக விளங்கும் ஆத்ம உணர்வே
சதா சர்வ காலம் நிழல் போல் விளங்கும் ஆத்ம உணர்வே
மனம் நன்மை நோக்கி சென்றாலும் தீமை நோக்கி சென்றாலும் ஏன்
மௌனமாகவே இருக்கிறாய்
நீயும் என் குருநாதர் போன்று தானா
நான் உன்னை நோக்கி அடி எடுத்தால் தான் நீ வெளிபடுவாயோ !!