சிவபெருமானை சிந்தையில் கண்டதில்லை
உலகளந்தவனை உணர்ந்ததில்லை
பிரமனை சற்றும் யோசித்தது இல்லை
இவை குற்றமாகாது குருவின் பாதத்தில் சரணடைந்தவனுக்கு

==================

உள்ளொளி நானாகி உயிராகி உத்தமனாகி ஒன்றி நின்றானை எங்கனம் விளிப்பேன்!!

==================

கண்ணே எனது குருவின் பாதத்தில் பதிந்துநில்
மூக்கே எனது குருவின் வீட்டில் வரும் வாசத்தை நுகர்ந்து இரு
மனமே எனது குருவை முப்பொழுதும் நினைத்திரு
காலே எப்பொழுதும் என்னை கூட்டிச்செல்
கையே, எப்பொழுதும் எனது குருவிற்கு சேவை செய்திடு
மூச்சே, எனது குருவை மறந்த பொழுது நின்றுவிடு

====================

சுமைகளின் பாரம் தங்களை நினைத்தவுடன் பஞ்சாக பறக்கின்றதே !!! இது எதனால் ?

Translate »