ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் நமஹ🙏🏻🙏🏻🙏🏻

அன்பே வடிவான பரம்பொருளே! பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! புகழும் புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே!

பேராற்றலையுடைய அருமையான தவத்தினையுடையோர்க்கு, அரசனே! மெய்ப் பொருளை விளக்கும் நூலானவனே! உமது அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே!

எல்லா உயிர்களிலும் நீக்கமற கலந்திருக்கும் ஒளிச்சுடரே! நீ இல்லாத இடமும் உண்டோ! நீ எங்கும் இருக்கிறாய்! நீ இல்லாத இடமே இல்லை! நீயே இவ்வுலகிற்கு வித்தானவன்! ஈரேழு லோகத்திற்கும்!!!

என் ஈசனே! இருள் நிறைந்த இவ்வுலகத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன்!
பரமனே! பார்க்கும் இடமெல்லாம் உன்னை நீக்கமறக்காணும் தன்மை வேண்டும் என் குருவே!

ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻

Translate »