1)கடவுள் குரு இருவரும் வேறல்லர் ஆகிய யாரொருவரிடமாவது ஒருவனுக்குப் பூரண நம்பிக்கை உண்டாவது மிகவும் அறிய பாக்கியம் ஆகும்.. அவ்வாறு நம்பிக்கை உண்டாகுமேயானால், அந்த நம்பிக்கையை காமதேனு கிடைத்தால் ஒருவன் எப்படிப் போற்றிக் காப்பானோ அவ்வளவு விருப்போடு சந்தேக விபரீதங்களுக்கு இடமளிக்காத உறுதியுடன் காப்பாற்றி வளர்த்துக் கொள்ள வேண்டும்..

2)மனித உருவில் காணப்பட்டாலும், ஆன்ம பராகாச சொரூபியாய் விளங்கும் ஞானகுருவை நாமரூபம் கடந்த பரம்பொருளாக கருதாத மக்கள் துராசரரப் பாவிகளுள் தலையாயவராவார்..

3)புலியின் வாய்ப்பட்ட மான் மீள முடியாதது போல, சற்குருவின் அருள் ஞானப் பார்வையில் அகப்பட்டோர் அற்புத தன்மையான அகந்தை இயல்பு அழிக்கப்பட்டுக் கைவல்யநிலை பெறுவரேயன்றி, ஒருக்காலும் கைவிடப்படவே மாட்டார் என்று உறுதியாய் உணர்க..

3)”தேக உருவே” நான் என்னும் அகந்தை உணர்வாகிய பனிக்கட்டி. ஆனந்தமே வடிவாய் இருந்து விளங்கும் சச் சித் ஆனந்த ஆன்மானுபூதியாகிய குருபோத சமுத்திரத்தில் இரண்டற்றுக் கரைந்து விடுவதே உத்தமமான குரு பூஜை என்றி அறிக..

4)சத்குருவை அனுகி அளவற்ற குருபக்தி செய்வதால் அவர் பொழிகின்ற அருட்பார்வை ஒன்றையே ( குருவருள் ஒன்றை மட்டுமே ) தமக்கு கதியாக நம்பி நிற்கும் அடியார்கள் இவ்வுலகில் இந்திரனைப் போல் எக்குறையுமற்று வாழ்வர். அவர்களுக்கு யாதொரு துன்பமுமம் இல்லை..

5)சற்குரு வேடத்தில் காணப்படுபவர் சாக்ஷாத் சிவபிரானே. அவர் தனது அருளொளி பெற்ற அடியார்களோடு அன்புறவு கொண்டு அளவளாவி மகிழ்வதற்காக மிக குதூகலம் உடையவராய், தனது தெய்வ வடிவை மறைத்து வேறோர் மனித உருவை ( சத்குரு திருமேனியை ) மேற்கொண்டவராய், திடபக்தியுடைய அவ்வடியார் திருக்கூட்டத்தில் சேர்ந்து திருவிளையாடல் செய்பவராகின்றார்

6)மோஷ வழியில் உறுதியுடன் முன்னேறும் மூடர்கள் மறதியினிலோ, அல்லது வறுமை, நோய் முதலிய வேறு எக்காரணங்களினாலோ வேத நெறியைப் பின்பற்றி நடப்பதினின்றும் நழுவ நேர்ந்தாலும்கூட தன் சற்குருவின் உபதேசங்களை மீறி நடப்பது கூடவே கூடாது…

Translate »