சுவாமிகளின் ஜீவ சமாதியின் முன்னர் தியானத்தில் அமர்ந்த பொழுது மனமற்ற நிலையில் வெளிப்பட்ட வரிகள்!!!

உய்வது சமாதியுற்றபின் காரணப் பெயரின் காரணத்தை வினவுவது  ஏன் பூரணமே!!

பெயரில்லா ஊரில்லா வரம்பில்லாதது கோயில் கொண்ட பின் வாழ்க்கைக் கதை வினவுவது ஏன் பூரணமே!!!

 

————————————————————————————————————-

பின்பு சுவாமிகளிடம் வேண்டுதல் !!!

 

தயை காட்டும் குருநாதருக்கு தயை காட்ட தயங்குவது ஏன் பூரணமே!

மெய் பொருளில் லயிப்பவர்க்கு பொன் பொருள் யாசிக்க செய்வது ஏன் பூரணமே!

மெய் பொருளை தேட வல்லாரிடம் பொன் பொருளை யாசிக்க செய்வது ஏன் பூரணமே!

மெய் பொருளை தேட வல்லார் பொன் பொருளை தாரை வார்க்க தயங்குவது ஏன் பூரணமே!

மெய் பொருளின் வாசகங்களை கனவில் இருப்பார் அலகால் அளப்பது ஏன் பூரணமே!

மெய் பொருளின் வாசகங்களை மெய் என்று நம்ப தயங்குவது ஏன் பூரணமே!

மெய் பொருளின் சேவைக்காக பெயர் புகழை தாரைவார்க்க தயங்குவது ஏன் பூரணமே!

இதய குகையில் வாசம் செய்யும் உத்தமனிடம் இதயக் கதவை திறக்க தயங்குவது ஏன் பூரணமே!

பூரணமாய் இருந்து பூரணமாய் ஆன பின்னும் சாதாரண ரூபத்தில் மெய்யை காட்டுவர் எத்தனை தான் பூரணமே!!

பூரணமாய் இருந்தபின்னும் நம்மில் ஒருவராய் வாழ்பவரை பற்றி அறிவதில்லை ஏன் பூரணமே!!!

Translate »