நன்றி – T.S.Kothandaraman

மறந்தேன் ! மறந்தேன் ! நன்றி சொல்ல மறந்தேன் ! வளர்த்தேன் ! வளர்த்தேன் ! நான் அழிந்து ” நான் ” வளர்த்தேன் ! அழிவதும் தெரியவில்லை ! வளர்வதும் தெரியவில்லை ! மாயை என்னும் மாய கடலில் சுழற்றிவிட்ட …

நிலை – T S Kothandaraman

தவமாய் தவமிருந்தேன் உன்னை காண ! சன நொடியில் உன்னை வெளிக்காட்டி என் தவத்தைக் களைத்தவனே! தவமாய் இல்லாவிடிலும் உன்னை வெளிப்படுத்துகின்றாய் ! கணப்பொழுது தாண்டியும் நிற்கிறாய்! நிற்கிறாய்! நான் உன்னை மறக்க பார்க்கிறேன்! நீயோ! மறைக்காமல்  நிற்கிறாய்! என்னை முழுவதுமாய் …

மாயை T.S.KOTHANDARAMAN

மனம் அறியேன்! எண்ணம் அறியேன் உடல் அறியேன்!  சுற்றமும், முற்றமும் அறியேன் !  இறைவா !  உன்னை அறிந்தும் அறியாமல் தவிக்கிறேன் !  மாயை என்னும் காரீருளிருந்து என்னை மீட்டு,  ஒளி காட்டு என் ஐயனே !

பற்றற்ற நிலை- T.S.KOTHANDARAMAN

  உணர்வு என்னும் மந்திரத்தை பற்றி விட்டேன் ! குரு அருளால் ! பற்றியது என்று பற்றுமோ முழுவாதுமாய் ! பற்றுயற்ற நிலைவரும்போது தான் பற்றுமோ இந்த பற்று !01.10.2010.

வேண்டுதல் – T.S.KOTHANDARAMAN

வேண்டுதலுக்குவேண்டி நின்றேன் ! வேண்டுதலே வேண்டாமென்று இருந்தேன வேண்டுதலுக்கு வேண்டிநின்றேன சில வினாடிகள் …… நானும் பத்தோடு ஒன்றானேன் ! வேண்டுதலை விட்டு வேண்டியவனை காண வேண்டுகின்றேன் அருள் குரு வாயாக……அகத்தீஸ்வரர் கோயில் நுங்கம்பாக்கம்

ஆன்ம திரை விலக்கலுக்கு பின்னால்….

ஆனந்தத்தில் திளைக்க அம்பலத்தானை வேண்டிநின்றேன் ! வேண்டியவனுக்குகோ ! காலுமில்லை ! கையுமில்லை ! அதே நிலையில் அம்பலத்தானும் ! வேண்டி நின்ற இடம், இடமோ ! வலமோ ! இல்லை ! நடுவில் நின்றது அவன், அவன் நிலையில் ” …