திருஅருட்பிரகாச வள்ளலார் குறிப்பித்தருளிய ஸ்ரீ தத்துவராய சுவாமிகளின் திவ்விய சரித்திரம்

                                                                        ஸ்ரீதத்துவராயர்

image
Jeeva samadhi of thathuvaraya swamigal

1)     தத்துவராயர் யார்?

அவர் ஒரு மகான்

2)     எங்கே பிறந்தார்?

வீரை என்னுந் திருவூரில் சோழநாடு

3)     எந்த நூற்றாண்டு?

16 ஆம் நூற்றாண்டு

4)     கல்வி அறிவு?

கல்வி அறிவு பெற விரும்பவில்லை உயரியஞானம் பெற விரும்பினார்.

5)     அதற்கு என்ன செய்தார்?

சற்குரு நாதரைத் தேடிச்சென்றார்.

6)     அவர் மட்டுமா?

இல்லை அவரது மாமனார் சொருபானந்தருடன்

7)     சற்குரு நாதர் கிடைத்தாரா?

கிடைத்தார்

8)     அவர் எந்த குலம்?

வேதியர்குலம்

9)     மேலும் அவரது சிறப்பு?

வடமொழி தென்மொழிகளில் பாடவல்லவர்

10)  மேலும்?

சந்நியாசி

11)  அப்புறம்?

சுத்தவேதாந்த விற்பன்னர்.

12)  சற்குருநாதர் பெயர்?

சிவப்பிரகாசர்.

13)  அவர் செய்தது என்ன?

தத்துவராயருக்கு மெய்ஞானம் வழங்கியருளினார்.

14)  மாமனார்?

சற்குருநாதர் கிடைக்காமல் திரும்பினார்

15)  பிறகு?

மருமகனுடைய அனுபவத்தைக் கண்டு அவருக்கு அடிமையானார்.

16)  அடிமை என்றால்?

சீடர் ஆவது.

17)  அப்புறம்?

உத்தம நெறியை உபதேசித்து வந்தார்

18)  பின்பு?

தத்துவராயர் சரித்திரம் பாடினார்

19)  வேறு பெயர் உண்டா?

உண்டு.

20)  அது என்ன?

பாடுதுரை.

21)  அத்துடன்?

சசிவர்ண போதம் என்பது ஒரு சீடனுக்காக எழதியது.

22)  தொடர்ந்து?

கவிமடல்.

23)  அத்துடன்?

ஈசுர கீதை பிரம கீதை.

24)  அவ்வுளவுதானா?

அஞ்ஞ வதைப் பரணி, மோக வதைப் பரணி.

25)  எங்கே சித்தி பொற்றார்?

கடலூர் காட்டுமன்னார் குடிக்கு உட்பட்ட எறும்பூரில்.

(விருத்தாசலத்தில் இருந்து கம்மாபுரம் வழியாக சிதம்பரம் செல்லும் சாலையில் எறும்பூர் உள்ளது)

26)  அங்கே என்ன இருக்கிறது?

தத்துவராயர் அதிட்டானம்.

27)  அதிட்டானம் என்றால்?

திருக்கோயில்.

28)  அவரது சித்தித் திருநாள்?

ஆடி மாதம் சதய நட்சத்திரம்.

29)  அந்த மகான் என்னசித்தி பெற்றார்?

சுத்த தேகசித்தி.

30)  அப்படி என்றால்?

உடலோடு மறையும் உன்னத சித்தி.

31)  அப்படிய?

அப்படியேதான்.

32)  அவரது அனுபவம்?

குரு துரிய நிலை.

33)  அப்படி என்றால்?

சிவ துரிய நிலை.

34)  அதைப் பெற்றவர்கள் வேறு யார்?

வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் மட்டும்தான்

35)  சசிவர்ண போதம் எதைத்தெரிவிக்கிறது?

கீழாகுனம் உடையவர் மேலான ஞானம் பெறுவதை.

36)  ஈசுர கீதை?

சிவஞானம் பெறுவதை.

37)  பிரம கீதை?

பிரம்மஞானம் பெறுவதை.

38)  அஞ்ஞவதைப் பரணி?

அஞ்ஞானத்தை ஒழித்து மெய் ஞானம் பெறுவதை.

39)  மோக வதைப் பரணி?

காம, வெகுளி, மயக்கத்தை ஒழித்து உத்தமன் ஆவதை.

40)  பாடுதுரை என்னும் நூல் எதைக் கூறுகிறது?

சமுதாயத்தில் கீழானவரை மேலானார் ஆக்குவதை.

41)  சென்று வழிபட்டால்?

சிறந்த தெய்வானுபவம் கிடைக்கும்

42)  அது எப்படி இருக்கும்?

ஒளி-வளர்ஒளி-பேரொளியாகி நிற்கும்.

43)  அதனால் அடைவது?

மரணமிலாப் பெருவாழ்வு.

44)  அப்படி என்றால்?

பேரின்பப் பெருவாழ்வு.

45)  அதிட்டானம் என்றால்?

அருள் நிலைக்களன்.

46)  அதன் அர்த்தம்?

அருள் கிடைக்கும் இடம்.

47)  அத்துடன்?

அருள் ஒளி பெறும் இடம்.

48)  கீழானவர் மேலானவர் ஆவது என்பது?

தோட்டி தொண்டமான் ஆவது.

49)  அப்படியா?

அப்படியேதான்

50)  ஆகவே?

இம்மை இன்பம், மறுமை இன்பம், பேரின்பம் மூன்றும் கிடைக்கும் இடம் தத்துவராயர் இடமாகும்.

51)  அதனால்?

ஒருமுறையாவது சென்று வழி பட்டு வரவும்.

52)  அந்த ஆலயம் யார் பொறுப்பு?

சிதம்பரம் ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடத்தின் பொறுப்பு.

53)  அந்த மடம் எங்கே உள்ளது?

மன்னார்குடித்தெருவில்

54)  அதன் சேவை?

ஆன்மீகச்சேவை உபகாரச்சேவை முதலியன.

55)  ஆமாம் பரணி யாருக்குப் பாடுவது?

அரசர்களுக்கு பாடுவது.

56)  எதனால்?

போர்க்களத்தில் 1000 யானைகள் கொண்ட யானை படையை வென்றதால் பாடுவது.

57)  அப்படி என்ன போர் செய்தார் தத்துவராயர்?

போராடும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் மன அலைவினைத் தமது திருகண் நோக்கு

ஒன்றினால் அடக்கி விடுவதால் பாடியது.

58)  அப்படியா?

அப்படியேதான்.

59)  ஒருமுறையாவது சென்று வழிபட்டு வருகிறேன்

அப்படியே செய்யும் உமது வாழ்வில் நல்ல திருப்பம் உண்டாகும்.

நன்றி வணக்கம்.

திருச்சிற்றம்பலம்.

தொகுப்பு :

வள்ளலார் இளைஞர் மன்றம் – கோட்டக்கரை.

மணிகண்டன் – வள்ளலார் குடில் – விருத்தாசலம்.
( தத்துவராயர் குருபூஜை அன்று அண்ணா சீனி.சட்டையப்பர் அவர்களால் எழுதி சிறு நூலாக வெளியிடப்பட்டது )

Courtesy: http://vallalarkudil.blogspot.in/

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *