கண்ணன் – Guruji Sundar

கண்ணனே! கண்ணுக்கு கண்ணானவனே!
கண்ணின் மணி போன்றவனே!
நீ என்னிடம் கண்ணாமூச்சி ஆடி
தோன்றி மறைந்த போது
உன்னை கண்டு பிடிக்க முடியாமல் திணறினேன்!

ஆனால் காலம் ஊர்ந்து செல்ல
என்னுடைய பரிபக்குவமும் வளர
உன்னை என்னிடமிருந்து மறைக்க
முடியாமல் திணறுகின்றாயே!
ஒரு வேளை நான் பக்குவபடாமல்
போயிருந்தால், என்னை அழவைத்து
வேடிக்கை பார்த்திருப்பாயோ! கண்ணா!!

கண்ணா! உண்மையை சொல்!
நான் உன்னை கண்டு பிடிக்க
வேண்டும் என்று தானோ என்னிடம்
தோன்றி மறைந்து விளையாடினாய்!

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *