Avudai Akkal – பரமே அகமென்றி ருந்தாலும் பிராரப்தம் பட்டா லொழிய விடுமோ

பரமே அகமென்றி ருந்தாலும் பிராரப்தம் பட்டா லொழிய விடுமோ

paramay agam endru irunthaalum praapdham pattal ozhiya vidumoa

Even if I abide as that (Supreme being) is it possible to get relieved from the Prarbdha (portion of Karma (action) that determines the present life situation)? 

ஜீவன் முக்தி யடைந்தி ருந்தாலும் தேகம் போகும் தனையும் கர்மம் புசித்தன்றோ கழியும்

jeevan mukthi adainthu irunthaalum thegam pogum thanaiyum karmam pusithu androa kazhiyum

Even if this jeeva gets liberated, the karma will continue to exhaust itself until this body dies away

உதித்து பிரதி தினமு மொழியவில்லை இரவிக்கு ஜனித்து மகா விஷ் ணு திரிகிறார் கலங்கி

uthithu pirathi thinmum ozhiyavillai iravikku janithu maha vishnu thirigiraar kalangi

The sun continues to rise every day.  Maha Vishnu has to take birth and undergoes turmoil during his several divine incarnations. 

பசிக்கு பிச்சை எடுத்து பர யீசர் மயங்கினார்

pasikku pichai eduthu para eesar mayanginaar

Shiva had went begging (Bhikshatana-murti)

பிரசித்தம் கர்மானுபவம் பிரகாசமாய் துடங்கி

prasiththam karmaa anubhavam pragaasamaai thudangi

The experience of karma is so popular, it begins splendidly

சாது ஜனங்களோடு சகவாசம் தினமும்

sadhu janangaloadu sagavaasam thinamum

Daily association with the spiritual wise

சர்வ காலமும் சித்தில் சர்வதா அறிவும்

sarva kaalumum siththil sarvathaa arivum

The attention is on the reality (Consciousness, Self) at all times and all places

பிரபஞ்சம் மித்தியை என்று பிரதி தின மொழியும்

brabanjam miththyai endru pirathi thina mozhiyum

Uttering daily that this world is illusion

பரம குரு பாதம் பக்தி யுடன் நினைவும்

parma guru paatham bakthiyudan ninaivum

Fixing the mind at the feet of Supreme Guru with devotion

காம குரோதங்களற்று கலக்க மற்றிருந்தாலும்

kaama krodhangalatrtru kalakka mattru irunthalum

Without getting caught in bewilderment due to the absence of desire and anger

ஸ்ரீமத் குரு வெங்கடேசர் தயவுயிருந்தாலும்

srimath guru venkataesar thayavu irunthaalum

Even with the grace of His Holiness Guru Venkatesar

கண்டது அனித்திய மென்று களித்திருந்தாலும்

kandathu aniththiyam endru kalithu irunthalum

Even while rejoicing that this world is temporal

அகண்ட சாம்ராஜ்யம் தன்னி லமிழ்ந்தி ருந்தாலும்

aganda saamraajyam thannil amizhnthu irunthaalum

Even while abiding in the boundless Self Empire 

Courtesy: http://shenkottaisriavudaiakkal.blogspot.in/

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *