தாமரையில் அமர்ந்த தாரகை – Guruji Sundar

தாமரையில் அமர்ந்த தாரகை ஏன் என்னிடம் நிலை நிற்க தயங்குகின்றாள் நீ என்னை வந்தடைந்தால் பல திருப்பணிகள் செய்வேனே! உன்னை அடைவதற்காக வெளியில் அலைந்து திரிந்து என்னை இழக்க வேண்டிய அவசியம் இருக்காதே !!

ஞானம் – Guruji Sundar

கடும் தவம் என்ற கடிவாளத்தால் மனமெனும் மாய குதிரையை அடக்கி, அறிந்து, புரிந்து, மனதின் கர்த்தாவை அணுகி மீண்டும், தவம் என்ற செங்கோலை கொண்டு மனதின் மூலத்தை புரிந்து அறிந்து, அதனை தனதாக்கி கொண்டு அதுவே நான் என்னும் அழியா ஊற்று …

அன்னை – Guruji Sundar

என்னை ஈரைந்து மாதம் சுமந்து, பெற்றவள் மட்டுமல்ல. எனக்கு நற்பண்புகள், நற்குணங்கள் அனைத்தையும், விதையிலேயே விதைத்தவள். நான் நர + அகம் என்னும் ஊரில் உழன்ற போது கண்ணின் மணி போல என்னை காத்து; என்னை கரை சேர்த்தவள். நான் ஆன்மிகம் என்னும் …

வாழ்க்கை – Guruji Sundar

மாலையிட்ட மங்கை கதறி துடிக்க, சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க, நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!! மகனே வாழ்க்கை என்பது இது அல்ல நீ வாழ்ந்தது வாழ்க்கையும் அல்ல !! சற்று கண்ணை அகல விரித்து இருந்தாலே உன் சுற்றத்தில் என்னையும் பார்த்திருப்பாயே !! மாயையும் மறையும் உன் அருகிலேயே இருந்தனரே …

நான் என்ற உணர்வு – Guruji Sundar

நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்த பின், அந்த நான் என்ற உணர்விலேயே எப்போதும் நிற்க பழக வேண்டும் ——————– நான் என்ற  உணர்வை அகத்தில் உணர்ந்தவனுக்கு இறப்பு என்பதே இல்லை ——————–

நான் என்ற உணர்வின் உதயதிற்காக காத்திருக்க வேண்டும் – Guruji Sundar

ஆலயத்தை நிர்மாணித்த பின் ஆண்டவனின் வருகைக்காக காத்திருப்பது போல, உள்ளம், சொல், செயல், அனைத்தையும், பரிசுத்தமாக்கிவிட்டு நான் என்ற உணர்வின் உதயதிற்காக காத்திருக்க வேண்டும்.

மகான்கள் யாரும் மறைந்து போய்விடவில்லை – Guruji Sundar

உலகத்தில் தோன்றிய மகான்கள் யாரும் மறைந்து போய்விடவில்லை, அவர்கள் அனைவரும் வேறு அலைவரிசையில் இயங்கி கொண்டிருக்கின்றார்கள். நாம் அந்த அலைவரிசையில் நம்மை ஐக்கியப்படுத்தும் போது அவர்களிடம் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.

ஆத்மன் – Guruji Sundar

ஆத்மனை அறிய வழியில்லாமல்.. அணைத்து ஆலயங்களிலும், மகான்களிலும், ஜீவன் முக்தி ஸ்தலன்களிலும் நான் தவமிருந்தேன்.. அண்ணலிட்ட அருட் பிட்சையினால் ஆத்மனை தரிசித்து, அவனே நான் என தெல்லற உணர்ந்து கொண்டேன், ஆத்ம ஜோதியில் என்னை முழுவதுமாக கரைத்து விட்டேன்.

You – Guruji Sundar

My Dear Yogis and fellow Seekers, Don’t waste your time by beating around the bush in the name of Meditation, Just close your eyes, Still the mind and come to …

உண்மை – Guruji Sundar

எனக்குள் முழ்கும் போது அது  தெரிகின்றது, உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை, உண்மையும் அதுவே! அப்படியிருக்க நி, நான் என்ற பேதம் எதற்கு?