ஸச்சிதானந்த ஸ்வருபம் தானடா நீ தானடா

ஸச்சிதானந்த ஸ்வருபம் தானடா நீ தானடா

You are THAT absolute existence, consciousness and bliss, You are THAT

ஸம்சயாதி பிரமை போனால் ததாகாரம் நீயடா

When the bewilderment born out of ignorance ceases, you are THAT

உள்ளும் புறமும் நீயடா ஜகத்தொன்று மில்லை பாரடா

You are within and without, look there is no world besides you

நிகில பேத ஸ்தூல சூக்ஷ்ம தேகம் ரஜ்ஜூ ஸர்ப்பம் போலடா

Similar to mistaking the rope to be a snake, the whole is mistaken to be the gross & subtle body.

கல்பித ப்ரபஞ்சமிது கானல் ஜலம் போலடா

This imaginary world is similar to the mirage mistaken for water

காணுமதிஷ்டான மாத்திரம் தானே உற்று பாரடா

Scrutinize (through self-enquiry) and see that there is only awareness (seer behind the vision)  

ஸ்வப்னமாம் மாயைகடந்த ஸ்வஸ்வரூபம்  நீயடா

You are THAT Self beyond this dream of illusion

ஜீவபிராந்தி பிரமை போனால் சிதாகாசம் நீயடா

When the bewilderment of individuality (Jiva) born out of ignorance goes away, you are THAT boundless intelligence

பொய்யும் மெய்யாக தோன்றும் புத்தி கல்பிதமே தானடா

The false appears to be the truth only because of the imagination of perception as the reality

பூரணமாய் நிறைந்த தத்போதமே நீயடா

You are THAT whole, all pervading Self-Consciousness

நிர்குணத்தில் குணமுண்டோ உற்றுணர்ந்து பாரடா

Examine closely (self-enquiry), is there any quality in THAT that has no attributes

நிராம்சத்தில் அம்சமுண்டோ நீ தானே உற்று பாரடா

You scrutinize (self-enquiry) and find is there any parts in THAT that is always whole

மலடி மைந்தன் போல் அவித்யை வந்திருந்து போனதும்

Like the barren child the ignorance arose and disappeared

அஹோ விசித்திரம் நிர்மலத்தில னேக உபாதியானதும் 

Oh! What a surprise, in this pure being, many adjuncts came forth

நிரதி சயானந்த சுகம் பாவனை பண்ண பயின்றதும்

(You) strived to conceptually derive listless pleasurable joy

அதை யனுபவித்து பார்க்கும் போது அகம் பதமென்றறிந்ததும்

But, when experiencing that joy, recognized that the joy is within (in the Self)

அக்ஷய அகண்ட ஸுகானந்த ஸ்வருபமே

(Your) essence is Imperishable boundless blissfulness

ஆசை காமக்ரோதலோப மற்றதே உன் தேகமே

You are devoid of desire, lust, anger and greed (it is insentient, but the ego identifies with the body and gets these qualities)

திரிபுடி மூன்று மற்று போனால் தேசிகர் தன் பாதமே

When those three triads (knower, the act of knowing and the object known) cease to be, (you) will be in Guru’s feet

ஸ்ரீமத்குரு வெங்கடேசர் சின்மய ஸ்வருபமே

(Your) essence is the embodiment of pure knowledge, the Guru, His holiness Venkatesar

Aavudai Akkal songs

Courtesy: http://shenkottaisriavudaiakkal.blogspot.in

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *