திருக்குறள்(தவம்)2

1)தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு

பொருள்:
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர். மற்றையோர் ஆசைகளுக்கு உட்பட்டு வீண்முயற்சி செய்பவர் ஆவர்..

2)வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

பொருள்:
தவத்தினால் வேண்டிய பயன்களை வேண்டியவாறே அடைய முடியுமாகையால் செய்வதற்குரிய தவத்தைச் செய்ய இல்லறத்தானும் முன் வரலாம்..

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *