காஞ்சி காமாட்சி – Guruji Sundar

எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை யுகங்கள், எத்தனை மனித தொடர்,  எத்தனை ஆத்மா ஞானிகள் உன்னை வணங்கியிருப்பர்.

அதே தொடரில் நானும் ஒரு சங்கிலி பிணைப்பாக வந்து தரிசிக்கின்றேன்.

நான் எத்தனை பிறவி எடுத்து எத்தனை முறை உன்னை வணங்கி இருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் உனக்கு நன்கு தெரியும்.     இந்த முறையாவது எனது பிறவி எனும் நோயை நீக்கி என்னை உனது கடைக்கண் படும் பார்வை தூரத்தில் வைத்துக் கொள் தாயே !!

———————–

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு நிறைவு வருவதில்லை, அது ஏன் ? நீ எனக்கு திகட்ட திகட்ட தேனை ஊற்றி கொடுத்தாலும் நான் மயக்கம் தெளிந்த பின் உன்னிடம் தான் கையேந்தி நிற்கின்றேன்.

ஞான மார்க்கம் என்ற ஆன்ம தேடலில் போர் வீரனாக திகழ்ந்த என்னை, நீ மட்டும் எப்படி நொடி பொழுதில், என்னை பக்தியில் ஊற்றெடுக்க வைக்கின்றாய்.

நீ எப்போது இருவருக்கும் இடையே உள்ள தூரத்தை குறைக்க போகின்றாய். பல காலம் என் இதய கதவை திறந்து தானே வைத்திருக்கின்றேன்.

நீ ஏன் என் அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிய தயங்குகின்றாய். நீ எப்போது என்னை இரைக்காக பாடுபடாமல், இறையில் முழு நேரமும் கழிக்க வைக்க போகின்றாய்!!!

இந்த வரம் என்னக்கு மட்டும் அல்லாமல் என்னை சேர்ந்த அனைத்து சிஷ்ய, பக்த கோடிகளுக்கும் நீ அருள வேண்டும்.

———————–

Leave a Reply

Or

Your email address will not be published. Required fields are marked *